சர்க்கரைப் பொங்கல் :தேவையான பொருட்கள்;
குக்கரில் ஒரு கப் பால் நான்கு கப் தண்ணீர், ஊறிய பச்சரிசி,வறுத்த பாசிப்பருப்பு,கடலை பருப்பு சேர்த்து வேகவைக்கவும். கொதிவந்தவுடன் அடுப்பை குறைத்து வெயிட் போட்டு மூன்று நான்கு விசில் வைத்து எடுத்து, ஆவி அடங்கியவுடன் மசித்து விடவும்.அரிசியின் தரத்தை பொறுத்து தண்ணீர் அளவு மாறுபடும். புது அரிசி என்றால் தண்ணீர் அளவு குறைத்து கொள்ளவும்.
நன்கு கலந்து விடவும்.சர்க்கரை அவரவர் ருசிக்கு கூடகுறைய சேர்க்கலாம்.
நெய் தாளிப்பு கரண்டியில் விட்டு முந்திரி திராட்சையை பக்குவமாக வறுத்து ரெடியான சர்க்கரைப் பொங்கலில் கொட்டவும்.
குக்கரில் அரிசியின் அளவிற்கு ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து,அரிசி,பாசிப்பருப்பு,இஞ்சி துருவல்(விரும்பினால்) சேர்த்து வேக வைக்கவும்.நான்கு விசில் விடவும்.
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - 2டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு கப்
அச்சு வெல்லம் - 350கிராம்
நெய் - ஒரு குழிக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 15
திராட்சை - 20
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். பாசிப்பருப்பை மணம் வர வறுத்து கொள்ளவும்.
குக்கரில் ஒரு கப் பால் நான்கு கப் தண்ணீர், ஊறிய பச்சரிசி,வறுத்த பாசிப்பருப்பு,கடலை பருப்பு சேர்த்து வேகவைக்கவும். கொதிவந்தவுடன் அடுப்பை குறைத்து வெயிட் போட்டு மூன்று நான்கு விசில் வைத்து எடுத்து, ஆவி அடங்கியவுடன் மசித்து விடவும்.அரிசியின் தரத்தை பொறுத்து தண்ணீர் அளவு மாறுபடும். புது அரிசி என்றால் தண்ணீர் அளவு குறைத்து கொள்ளவும்.
நன்கு கலந்து விடவும்.சர்க்கரை அவரவர் ருசிக்கு கூடகுறைய சேர்க்கலாம்.
நெய் தாளிப்பு கரண்டியில் விட்டு முந்திரி திராட்சையை பக்குவமாக வறுத்து ரெடியான சர்க்கரைப் பொங்கலில் கொட்டவும்.இப்படி தாங்க நான் செய்வேன்.கடலைப்பருப்பு மசியாமல் தூரத்திற்கு ஒன்று பார்க்க அழகாய் ருசியாய் இருக்கும்.
வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்;
பச்சரிசி- கால் கிலோ
பாசிப்பருப்பு - 100கிராம்
நெய் - ஒரு குழிக்கரண்டி
முழு மிளகு - 1டீஸ்பூன்
முழு சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1டீஸ்பூன் (விரும்பினால்)
முந்திரி - 10-15
கருவேப்பிலை - 2இணுக்கு
உப்பு - தேவைக்கு.
குக்கரில் அரிசியின் அளவிற்கு ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து,அரிசி,பாசிப்பருப்பு,இஞ்சி துருவல்(விரும்பினால்) சேர்த்து வேக வைக்கவும்.நான்கு விசில் விடவும்.--ஆசியா உமர்.
இந்த குறிப்புக்களை மங்கையர் உலகம் -ஜனவரி மாதப் போட்டி-தமிழ் நாட்டு பாரம்பரிய உணவுகள் என்ற தலைப்பிற்கு அனுப்புகிறேன்.பொங்கல் சமயம் என்பதால் இந்தக் குறிப்பு.











27 comments:
Aaa haa...arumai!
ரொம்ப ருசியா இருக்கும்போல.. பார்க்கிறதுக்கு இப்படின்னா?.. சாப்பிட்டா.. அட.அடடா.. சூப்பர். பகிர்வுக்கு நன்றி ஆசியாக்கா.
super pongal..
ஆசியா...
சர்க்கரைப் பொங்கல்ல கடைசி ஸ்டெப் காணோமே!!
மூக்கும் முழியுமா அழகா இருக்கார். ;) நெத்தியில... என்ன ஆச்சு!!
Parkave supera irukku...
நல்ல குறிப்புகள் ஆசியா. நன்றி.
ஆஹா.... பொங்கல் வர சமயத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்ய குறிப்பு....
நிறைய பேருக்கு உதவும்... :))
வெண் பொங்கல் முழு பிளேட்டும் எனக்கே .
எங்க அம்மா இப்படிதான் செய்வாங்க
sweat sister for sarkarai pongal. white sister for venn pongal.
வயசானவங்களுக்கு வெண்பொங்கல்,வாலிப வயதினருக்கு சர்க்கரை பொங்கல். சூப்பர்.
மகி மிக்க நன்றி.
ஸ்டார்ஜன் மிக்க நன்றி.சும்மா படம் காட்டுவதை பார்த்து அசந்திடாதீங்க சகோ.
காஞ்சனா மிக்க நன்றி.
இமா வாங்க,கடைசி ஸ்டெப் எடுக்க யாரும் வழி விடலை.மிக்க நன்றி இமா.
காயத்ரி மிக்க நன்றி.
ராமலஷ்மி மிக்க நன்றி.
வெங்கட் நாகராஜ், இது சும்மா சிம்பிளாக செய்தது.உங்காத்துல ஸ்பெஷலாக இருக்கும்.மிக்க நன்றி.
ஏஞ்சலின் கருத்திற்கு மிக்க நன்றி.
நிஷாக்கா வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
//sweat sister for sarkarai pongal. white sister for venn pongal.//
ஸ்வீட் தான் ஸ்வெட்டாகி விட்டதோ!
( food nellai)சங்கரலிங்கம் சார் கருத்திற்கு மிக்க நன்றி.
இரண்டுமே சூப்பர். வெண்பொங்கல் இதே முறையில் ட்ரை பண்ண வேண்டும்.
அதிரா வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
//மணம் வர வறுத்து கொள்ளவும்.//
// தட்டி போட்டு//
//குத்து மதிப்பாக மூன்று பெரிய//
//வாயில் அகப்படாது.//
//ஆவி அடங்கியவுடன் மசித்து விடவும்.//
//நெய் தாளிப்பு கரண்டியில் விட்டு//
//தூரத்திற்கு ஒன்று பார்க்க அழகாய் ருசியாய் இருக்கும்.//
ஸ்..யப்பா...ஒரு டெரர் படம் பார்த்த மாதிரியே இருக்கு ...!! :-)))
பொங்கல் நேரத்துல ரெண்டு வகையா அசத்துங்க :-)))
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.
ஆஹா அக்காவீட்டில் பொங்கல் ஆரம்பம் ஆச்சா.. பார்க்கும் பொழுதே சர்க்கரைப் பொங்கல் நாக்கில் சப்பு கொட்ட வைக்கிறதே
கருத்திற்கு மிக்க நன்றி சிநேகிதி.
mஇரண்டு வகை பொஙக்லும் அருமை, இதான் குக்கரில் ஈசியா முடிந்துவிடும்.
எல்லோருகும் பிடித்த்து சர்க்கரை பொங்கல் தான் அடிக்கடி செய்வது சர்க்க்ரை பொங்கல் தான் , மாதம் ஒருமுறை கண்டிப்பாகசெய்துவிடுவேன்
வெண்பொங்கல் எனக்கு மட்டும் தான் , ரொம்ப பிடிக்கும், சுட் சுட ஹோட்டலில் சாப்பிட பிடிக்கும்
சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் பிரமாதமா இருந்தது. படங்களுடன் விளக்கம் அருமை.
ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
//சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் பிரமாதமா இருந்தது. படங்களுடன் விளக்கம் அருமை.//
நன்றிங்க கோவை2தில்லி.மிக்க மகிழ்ச்சி.
இனிய தமிழர்திருநாள் நல்வாழ்த்துகள்.. உங்களின் இந்த குறிப்பினை நமது வலைப்பூவில் இணைத்திருக்கிறோம்... உங்களின் இந்த குறிப்புக்கு மிக்க நன்றி
படிப்படியாகப் படங்களுடன் விளக்கம் அருமை ஆசியா...
Post a Comment